சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி..!

Star Player doubtful for #CSK's upcoming clash against #KXIP at #Chepauk | வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #CSKvKXIP

சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)
  • News18
  • Last Updated: April 5, 2019, 8:15 PM IST
  • Share this:
சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான நட்சத்திர வீரர் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

ஆனால், வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது.


CSK Team
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (Twitter)


மும்பை அணி 18 ஓவர்கள் வரை சென்னை அணியின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதற்கு அடுத்து 12 பந்துகளில் 45 ரன்களை சி.எஸ்.கே பந்துவீச்சாளர்கள் வாரிக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது. பிராவோ வீசிய கடைசி ஓவரில் மட்டும் 40 ரன்கள் அடிக்கப்பட்டதால் மும்பை 170 ரன்கள் குவித்தது.

அதே ஓவரில் பிராவோவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, பேட்டிங் செய்ய வந்தபோதும் மெதுவாகவே ரன் எடுக்க ஓடினார். போட்டி முடிந்ததும் பேசிய தோனி, அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தார். பிராவோ சிகிச்சை எடுத்து வருவதால் சில போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Dhoni, Dwayne Bravo, பிராவோ, தோனி
போட்டியின்போது பிராவோவுக்கு ஆலோசனை தரும் தோனி.


குறிப்பாக, சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் போட்டியில் பிராவோ பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் பங்கேற்கவில்லை என்றால் சி.எஸ்.கே அணிக்கு கூடுதல் இழப்பாக இருக்கும்.

PHOTOS: மைதானத்தில் அமைதி.. டிரெஸிங் ரூமில் சேட்டை.. தோனியின் அட்டகாசம்!



VIDEO: மைதானத்துக்குள் ஹெலிகாப்டரை இறக்கி துப்பாக்கி முனையில் கால்பந்து வீரர் கடத்தல்!

VIDEO: மிதாலிக்கு பந்துவீசிய ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் முன்னாள் கேப்டன்!

இதெல்லாம் ஒரு பிட்ச்சா? டெல்லி ஆடுகளத்தை விளாசிய பாண்டிங்!

ஃபோட்டோவை கிழித்த ஆண்டர்சன்... பதிலடி கொடுத்த அஸ்வின்!

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தடைவிதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்