ராஜஸ்தான் வீரர்களுக்கு டியூசன் எடுத்த தல தோனி!

#IPL2019: #Dhoni #Tuition Class To #Rajasthan Players After #CSK Thrilling Won | இக்கட்டான சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து வீரர்களுக்கு தோனி ஆலோசனை வழங்கினார்.

Web Desk | news18
Updated: April 12, 2019, 7:40 PM IST
ராஜஸ்தான் வீரர்களுக்கு டியூசன் எடுத்த தல தோனி!
ராஜஸ்தான் வீரர்களுக்கு டியூசன் எடுத்த தல தோனி. (BCCI)
Web Desk | news18
Updated: April 12, 2019, 7:40 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் த்ரில் வெற்றிக்கு பிறகு, ராஜஸ்தான் வீரர்களுக்கு தல தோனி டியூசன் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.

அடுத்துக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிகவும் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, தோனி 58 ரன்களும், ராயுடு 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் வெற்றிக்கு போராடி தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அணி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


Mitchell Santner, Jadeja. CSK
வெற்றிக் கொண்டாட்டத்தில் சாண்ட்னெரை தூக்கிய ஜடேஜா. (BCCI)


கடைசி பந்தில் சென்னை அணியின் த்ரில் வெற்றி ரசிகர்களிடையே மறக்க முடியாத வெற்றியாக இருக்கிறது. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களுக்கு கடினமான சூழலில் எப்படி விளையாட வேண்டும் என சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி ஆலோசனை வழங்கினார்.இந்த வீடியோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவிற்கு கீழே, கிரிக்கெட் ரசிகர்கள் பலர் தோனியை புகழ்ந்து பதிவிட்டுள்ளனர்.ஐ.பி.எல்-ல எங்களோட தர்பார்தான்... சி.எஸ்.கே வெற்றி குறித்து ஹர்பஜன் தமிழில் ட்வீட்!

#SingaporeOpen | பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்!

VIDEO | நம்ப முடியாத வெற்றி... நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர் வீடியோ..!

VIDEO | நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? தோனியை தாக்கிய மோசமான பவுன்சர்!

ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... உளவு அமைப்புகள் எச்சரிக்கை...!

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

தோனி, அம்பதி ராயுடு அதிரடி! கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி..


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...