IPL 2019: டெல்லி அணியின் பெயர் மாற்றம்!
#DelhiDaredevils change name to #DelhiCapitals | டெல்லி அணியின் ஜெர்சியும் மாற்றப்பட்டு புதுப்பொழிவுடன் களமிறங்க உள்ளது.
news18
Updated: December 4, 2018, 10:25 PM IST
news18
Updated: December 4, 2018, 10:25 PM IST
2019 ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயரை அணி உரிமையாளர்கள் மாற்றியுள்ளனர்.
ஐ.பி.எல் டி-20 தொடரில் விளையாடி வந்த டெல்லி டேர்வில்ஸ் அணி, இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் கோப்பையை வென்றதில்லை. கடந்த 2018-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கவுதம் கம்பீரின் நீக்கத்திற்குப் பின், ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையிலான டெல்லி அணி ஓரளவுக்கு சிறப்பாக விளையாடியது.டெல்லி லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்ட கம்பீர், நடப்பு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியில் இருந்தே கழற்றிவிடப்பட்டார். நடப்பு ஆண்டு தொடக்கத்தில் டெல்லி அணியின் 50% பங்குகளை வாங்கியது ஜே.எஸ்.டபிள்யூ ஸ்போர்ட்ஸ் நிறுவனம். டெல்லி அணியின் மீதான சாபம் நீங்க அணியின் பெயரை மாற்ற அணி நிர்வாகம் முடிவு செய்தது.
டெல்லியில் இன்று நடந்த விழாவில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரை டெல்லி கேபிடல்ஸ் என மாற்றி புதிய பெயர் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அணியின் ஜெர்சியும் மாற்றப்பட்டு புதுப்பொழிவுடன் களமிறங்க உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் என்ற புதிய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தவிர, பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நீடிக்கிறார். அண்மையில், இவருக்கு உதவியாளராக முகமது கைப் சேர்க்கப்பட்டார். மற்றொரு உதவிப் பயிற்சியாளர்களில் பிரவீன் ஆம்ரே செயல்படுகிறார். இந்த தொடரிலாவது, டெல்லி அணி கோப்பை வெல்லுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் பார்க்க...

No More Delhi Daredevils. Let's welcome #DelhiCapitals to IPL 2019. #ThisIsNewDelhi. pic.twitter.com/x3JIcxFwEZ
— 🅼🆁. 🅿🆁🅾🅵🅴🆂🆂🅸🅾🅽🅰🅻 (@LiveRanjith_G) December 4, 2018
Loading...
Dilliwasiyon, say hello to Delhi Capitals!#ThisIsNewDelhi pic.twitter.com/KFW8f3GIP7
— Delhi Capitals (@DelhiCapitals) December 4, 2018