ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நடப்பு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. லீக் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
பட்டியலில் மூன்று இடத்தில் இருக்கும், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.
டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

அரைசதம் அடித்த இளம் வீரர் ரியான் பராக். (BCCI)
இறுதியில், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, இளம் வீரர் ரியான் தனது முதல் ஐ.பி.எல் அரைசதத்தை அடித்தார்.
அடுத்துக்களமிறங்கிய டெல்லி அணி, ரிஷப் பண்ட் (53) அதிரடியால் 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட். (BCCI)
இதன்மூலம், 18 புள்ளிகளுடன் டெல்லி அணி 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மான்கட் அவுட்டைவிட மோசமானது இந்த அவுட்.. நீங்களே வீடியோவை பாருங்க!
VIDEO | வைரலாகும் சி.எஸ்.கே வீரர்கள் தமிழில் பாடிய பாடல்!
ஆர்.சி.பி. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கோலி, டி வில்லியர்ஸ்!
அப்ரிடி ஒரு கோமாளி.. மனநலம் பாதிக்கப்பட்டவர்... கம்பீர் பதிலடி!
உலகக்கோப்பையை விட ஐ.பி.எல் போட்டிதான் சிறந்தது.. வெளிநாட்டு வீரர் புகழாரம்!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.