#RCBvDD | ஷ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்.. பெங்களூருவை வீழ்த்தியது டெல்லி!

#IPL2019: #DelhiCapitals Won By 4 Wickets | முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. #RCBvDD

news18
Updated: April 7, 2019, 7:25 PM IST
#RCBvDD | ஷ்ரேயாஸ் அதிரடி ஆட்டம்.. பெங்களூருவை வீழ்த்தியது டெல்லி!
ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி. (BCCI)
news18
Updated: April 7, 2019, 7:25 PM IST
பெங்களூரு அணிக்கு எதிராக லீக் போட்டியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரின் 20-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்தீவ் படேல் - கேப்டன் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர். பார்த்தீவ் (9), டி வில்லியர்ஸ் (17), மார்கஸ் ஸ்டோயினிஸ் (15) ஆகியோர் விரைவில் வெளியேறினர். அடுத்து வந்த மொயின் அலி அதிரடியாக 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Virat Kohli Batting, RCB
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கோலி. (BCCI)


பொறுப்புடன் விளையாடிய கோலி 33 பந்துகளில் 41 ரன்களில் எடுத்து அவுட்டானார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணியில், தொடக்க வீரர் ஷிகர் தவான் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார். பிரித்வி ஷா (28), கொலின் இங்ரம் (21) ஆகியோர் ஓரளவுக்கு சேர்த்து வெளியேறினர். முதலில் மெதுவாக விளையாடிய ஷ்ரேயாஸ் 10 ஓவர்களுக்கு மேல் அதிரடி காட்டினார்.

Shreyas Iyer, DD, IPL
அரைசதம் அடித்து பேட்டை உயர்த்திக் காட்டும் ஷ்ரேயாஸ் ஐயர். (BCCI)
Loading...
ஷ்ரேயாஸ், 50 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில், அந்த அணி 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், நடப்பு சீசனில் பெங்களூரு அணி தனது 6-வது தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கிறது.

ஆர்.சி.பி பரிதாபங்கள்... தோனியைப் போல் செய்யத் தவறிய கோலி!

VIDEO | கூல் கேப்டன் தோனியையே டென்சனாக்கிய தீபக் சாஹர்!

முதல் போட்டியிலேயே அடித்து நொறுக்கிய மும்பை வீரர்!

ஹைத்ராபாத்துக்கு இப்படி ஒரு நிலையா?

ஜூனியர் வாட்சனுடன் ஓட்டப் பந்தயத்தில் போட்டி போட்ட தோனி

"நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும்": அஜித் வசனத்தில் அசத்திய ஹர்பஜன் சிங்

Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626