#DCvRCB | டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங்.. டெல்லி அணியில் ஒரு மாற்றம்..!

#IPL2019: #DC Won The Toss and Choose To Bat First Vs #CSK | இரு அணிகள் முதல் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இருப்பதால் 2-வது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கின.

news18
Updated: March 26, 2019, 7:59 PM IST
#DCvRCB | டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங்.. டெல்லி அணியில் ஒரு மாற்றம்..!
டாஸ் போடும் கேப்டன்கள் தோனி - ஷ்ரேயாஸ் ஐயர். (IPL)
news18
Updated: March 26, 2019, 7:59 PM IST
பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. இந்தத் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய 5-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன.

Dhoni, Shreyas Iyer, Table Tennis
தோனி - ஷ்ரேயாஸ் ஐயர். (IPL)


இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி இருப்பதால் 2-வது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கின.

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலிவுங் செய்கிறது.

DC XI
டெல்லி கேப்பிடல்ஸ் லெவன் அணி விபரம். (IPL)
Loading...
டெல்லி அணியைப் பொறுத்தவரை, ஒரு மாற்றம் செய்யப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் நீக்கப்பட்டு, மூத்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

CSK XI
சி.எஸ்.கே ஆடும் லெவன் அணி விபரம். (IPL)


சென்னை அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியே களமிறங்கியது.

ஐ.பி.எல். தொடரில் இருந்து ரத்தாகிறது சர்ச்சைக்குரிய மான்கட் அவுட்!

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ரசிகரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய தல தோனி!

அஸ்வின் செய்தது அவுட்டாக்கியது சரியா? தவறா? கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருத்து!

VIDEO: டேபிள் டென்னிஸ் போட்டியிலும் கலக்கும் தல தோனி!

விக்கெட் எடுத்த அஸ்வின்... கடுப்பான பட்லர்!

Also Watch..



First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...