#DDvSRH | டெல்லியை சுட்டெரிக்குமா சன்ரைசர்ஸ்? வெற்றி வாய்ப்பு யாருக்கு?

#IPL2019: #DCVSSRH PREVIEW, #HeadtoHead | ரிக்கி பாண்டிங், கங்குலி ஆகியோரின் ஆலோசனை டெல்லிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

news18
Updated: April 4, 2019, 1:52 PM IST
#DDvSRH | டெல்லியை சுட்டெரிக்குமா சன்ரைசர்ஸ்? வெற்றி வாய்ப்பு யாருக்கு?
டெல்லி கேப்பிடல்ஸ் அணி. (BCCI)
news18
Updated: April 4, 2019, 1:52 PM IST
ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் 16-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசனின் 16-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.




இதுவரை, டெல்லி அணி 4 போட்டிகளில் விளையாடி தலா இரண்டு வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளது. ஆனால், பலம் வாய்ந்த மும்பை அணியும், கொல்கத்தா அணியும் வென்றுள்ளது. முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 போட்டியில் விளையாடி 2 வெற்றி, 1 தோல்வியை பெற்றுள்ளது.
Loading...
இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 4-இல் டெல்லியும், 8-ல் ஹைதராபாத் அணியும் வென்றுள்ளது. டெல்லியில் நடந்த 4 போட்டிகளில் 3-ல் ஹைதராபாத் அணியும், ஒரேயொரு போட்டியில் மட்டும் டெல்லியும் வென்றுள்ளது.



புள்ளி விபரங்களைப் பார்த்தால் ஹைதராபாத் அணிக்கே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஹைதராபாத் அணி சொந்த மண்ணைத் தாண்டி கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால், டெல்லி அணி தனது கோட்டையில் சாதிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ரிக்கி பாண்டிங், கங்குலி ஆகியோரின் ஆலோசனை டெல்லிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

VIDEO: தோனிக்கே மான்கட் அவுட்டா? பல்பு வாங்கிய பாண்டியா!

இரட்டைப் பதவி ஆதாயம்: சவுரவ் கங்குலிக்கு பிசிசிஐ நோட்டீஸ்!

தொடக்கவீரர்கள் சொதப்பல்! மும்பையிடம் வீழ்ந்தது சென்னை..




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...