#DCvMI | டெல்லியை வீழ்த்துமா மும்பை இந்தியன்ஸ்? வெற்றி வாய்ப்பு யாருக்கு?

#IPL2019: #DCVSMI PREVIEW, Protagonists, Head to Head | வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் மோதிய முதல் லீக் போட்டியில் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #DCvMI

#DCvMI | டெல்லியை வீழ்த்துமா மும்பை இந்தியன்ஸ்? வெற்றி வாய்ப்பு யாருக்கு?
ரோகித் சர்மா - ஷ்ரேயாஸ் ஐயர்.
  • News18
  • Last Updated: April 18, 2019, 6:15 PM IST
  • Share this:
ஐ.பி.எல் தொடரின் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது. நடப்பு சீசனில், 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

அதேபோல், 10 புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ரன் ரேட் அடிப்படையில் 2-வது இடத்தில் உள்ளது. வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் மோதிய முதல் லீக் போட்டியில் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஹாட்ரிக் வெற்றி பெற்ற டெல்லி அணி, 4-வது வெற்றியை நோக்கி களமிறங்க உள்ளது.

Delhi Capitals Team, IPL
டெல்லி கேப்பிடல்ஸ் அணி. (BCCI)


இரு அணிகளின் பலம் vs பலவீனம்:

Loading...

ஷிகர் தவான், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், கொலின் முன்ரோ ஆகியோர் பெரிய ஸ்கோரை அடித்து அணிக்கு உதவுகின்றனர். இளம் வீரர்கள் பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் ஆகியோர் விரைவில் ஆட்டமிழப்பது பலவீனம்.

பிரித்வி ஷா ஒரு போட்டியில் 99 ரன்கள் அடித்ததை தவிர்த்து, 7 இன்னிங்சில் 88 ரன்களே அடித்துள்ளார். தொடக்க வீரர்கள் நிலைத்து ஆட வேண்டிய அவசியம் உள்ளது. பந்துவீச்சில் ரபாடா அணிக்கு பலம் சேர்க்கிறார்.

மும்பை அணியில், ரோகித் சர்மா மற்றும் டி காக் ஆகியோர் நல்ல துவக்கம் கொடுத்தால் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியா ரன் எண்ணிக்கை அதிகரிப்பார்கள். வேகப்பந்து வீச்சில் பும்ரா வளர்ச்சி கண்டிருப்பது அணிக்கு பலம்.

mumbai indians, IPL
மும்பை இந்தியன்ஸ் அணி. (BCCI)


வெற்றி vs தோல்வி விகிதம்:

இதுவரை, இரு அணிகளும் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. 12-ல் டெல்லியும், 11-ல் மும்பையும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் 2012-க்கு பிறகு நடந்த 6 போட்டிகளில் 5-ல் டெல்லியும், 1-ல் மட்டும் மும்பையும் வெற்றி பெற்றுள்ளது.

மும்பையை வீழ்த்த டெல்லிக்கு அனைத்து பலமும் இருப்பதாக முந்தைய போட்டிகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

சி.எஸ்.கேவை துரத்தும் ‘நோ-பால்’ சர்ச்சை... அம்பயரின் முடிவால் ரசிகர்கள் கோபம்!

தல தோனி எப்போது அணிக்கு திரும்புவார்? ரெய்னாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

காலையிலேயே ஓட்டுப்போட்ட கிரிக்கெட் பிரபலம்... ரசிகர்களுக்கு முன்னுதாரணம்!

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!

ஜானி பேர்ஸ்டோ, வார்னர் அதிரடி! சென்னையை எளிதாக வீழ்த்திய ஹைதராபாத் அணி

ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?

ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி இல்லை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!

தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!








தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...