DCvCSK | டெல்லியை இன்று எதிர்கொள்கிறது சென்னை!

#IPL2019: #DCvsCSK PREVIEW, Head to Head | டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து 213 ரன்கள் குவித்தது.

news18
Updated: March 26, 2019, 6:09 PM IST
DCvCSK | டெல்லியை இன்று எதிர்கொள்கிறது சென்னை!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (IPL)
news18
Updated: March 26, 2019, 6:09 PM IST
டெல்லியில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 5-வது போட்டியில் மூத்த வீரர்களைக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இளம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி முதல் இந்தியாவில் களைகட்டி வருகிறது. இந்தத் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Raina Training, CSK
தீவிர பயிற்சியில் ரெய்னா. (CSK)


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் போட்டியில் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 70 ரன்களில் சுருட்டியது. அத்துடன், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

அதேபோல், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து 213 ரன்கள் குவித்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார்.

Rishabh Pant, ரிஷப் பண்ட்
அதிவேக அரைசதம் அடித்த ரிஷப் பண்ட். (DC)
Loading...
சென்னை அணியிலும் பலமான பேட்டிங் வரிசை உள்ளது. மும்பையில் நடந்த போட்டியில் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் 151 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி மிரட்டினார்.

இரு அணிகள் இடையிலான போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.

#IPL2019 : அதிரடி காட்டிய கெயில், பட்லர்... சுவாரஸ்யமான விஷயங்கள்!

விக்கெட் எடுத்த அஸ்வின்... கடுப்பான பட்லர்!

Also Watch...

First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...