தமிழ் மக்களுக்காக எனது முதல் கானா பாட்டு... இது சும்மா டிரெய்லர் தான்மா..!

#IPL2019: #CSK's Star #HarbhajanSingh Sang First Tamil Song | ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தமிழில் பதிவிட்டு தமிழக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

news18
Updated: March 29, 2019, 7:58 PM IST
தமிழ் மக்களுக்காக எனது முதல் கானா பாட்டு... இது சும்மா டிரெய்லர் தான்மா..!
தமிழ் பாடல் பாடிய ஹர்பஜன் சிங். (CSK)
news18
Updated: March 29, 2019, 7:58 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங், தமிழக மக்களுக்காக தனது முதல் தமிழ் பாடலைப் பாடியுள்ளார். அந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது.

கடந்தாண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தமிழில் பதிவிட்டு தமிழக கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

Harbhajan Singh, ஹர்பஜன் சிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங். (CSK)


தமிழ் படங்களில் வரும் ரஜினிகாந்த் முதல் பல நடிகர்கள் பேசிய பிரபல பஞ்ச் வசனங்களுடன் அவர் பதிவிடும் ட்வீட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகுவது வழக்கம். இந்நிலையில், தமிழக தமிழக மக்களுக்காக முதல் முறையாக தமிழில் கானா பாடலைப் பாடியுள்ளார் ஹர்பஜன் சிங்.

இதுகுறித்து அவரது ட்விட்டரில், “அன்பால் நிறைந்த ஆனந்தங்கள் ஆயிரம், அதற்கு எல்லைகள் ஏதும் இல்லை என்பதற்கு இதுவே உதாரணம். என் தமிழ் மக்களுக்காக முதல் பாட்டு. இது சும்மா டிரெய்லர் தான்மா இன்னும் மெயின் பிக்சர பார்க்கலயே. நான் அவிழ்த்துவிடும் பாட்டுல பல விசிலு சத்தம் காதுல @ChennaiIPL #Yellove கேளு கேளு இது கானா பாட்டு” என்று குறிப்பிட்டு அவர் பாடிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.ஹர்பஜன் சிங் பாடிய தமிழ் கானா பாடல் டிரெய்லர் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

PHOTOS: சென்னை அணி வீரர்களின் புதிய அவதாரங்கள்!

யூசுஃப் பதான் வைத்த கிராண்ட் டின்னர்... தடபுடல் விருந்தால் அசந்துபோன ஹைதராபாத் வீரர்கள்...!

இன்றுடன் முடிகிறது தடைக்காலம்... உலகக்கோப்பையில் ஸ்மித், வார்னருக்கு இடம் கிடைக்குமா?

#CSKvRR | பாக்ஸிங்கிலும் பட்டைய கிளப்பும் ‘சின்ன தல’ ரெய்னா!

வெற்றியைப் பறித்த நோ-பால்... நடுவர்களை சாடிய காயம் பட்ட சிங்கம்...!

Also Watch...First published: March 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...