VIDEO | சகவீரருக்கு மொட்டை அடித்துவிட்ட பிராவோ!

#IPL2019: #CSK's Star #Bravo Made New Hair Style To teammate #MonuSingh | மைதானத்தில் வெறும் விளையாட்டோடு மட்டுமல்லாமல், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் பிராவோ தவறுவதில்லை.

news18
Updated: April 9, 2019, 12:40 PM IST
VIDEO | சகவீரருக்கு மொட்டை அடித்துவிட்ட பிராவோ!
மொட்டை அடித்துவிடும் பிராவோ. (CSK)
news18
Updated: April 9, 2019, 12:40 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராவோ, தனது அணியின் சக வீரர் மோனு சிங்கிற்கு மொட்டை அடித்துவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த டுவைன் பிராவோ, சர்வதேச அளவில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவாக இருக்கிறார். 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடரின் மூன்று சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடினார்.

2011-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ இணைந்தார். 2012-ம் ஆண்டிலேயே 461 ரன்கள் விளாசிய அவர், 2013-ல் 32 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பிராவோ. அண்மையில் சென்னை அணிக்காக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.


Dwayne Bravo, பிராவோ!
விக்கெட் வீழ்த்திய கொண்டாட்டத்தில் பிராவோ. (CSK)


மைதானத்தில் வெறும் விளையாட்டோடு மட்டுமல்லாமல், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் பிராவோ தவறுவதில்லை. மைதானத்தில் விக்கெட் எடுத்தாலோ, கேட்ச் பிடித்தாலோ நடனமாடி ரசிகர்களை மகிழ்விப்பார். அதனால், பிராவோவுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இந்நிலையில், பிராவோ, தனது அணியின் சக வீரர் மோனு சிங்கிற்கு மொட்டை அடித்துவிட்டார். இந்த வீடியோவை சென்னை அணி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதில், மோனு சிங்கிற்கு புதிய ஹேர் ஸ்டெய்லை பிராவோ உருவாக்குகிறார்.

Loading...




இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

களத்தில் இறங்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்! பெருமைப்படும் சுரேஷ் ரெய்னா

Also Watch..






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...