#தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு சொந்தங்களே... ஹர்பஜன் தமிழில் ட்வீட்!

#IPL2019: #CSK's #HarbhajanSingh Wishes #TamilNewYear in Twitter | சித்திரை மாதத்தின் முதல் நாள் #தமிழ்புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது.

#தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு சொந்தங்களே... ஹர்பஜன் தமிழில் ட்வீட்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங். (CSK)
  • News18
  • Last Updated: April 14, 2019, 1:22 PM IST
  • Share this:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங், அன்பு சொந்தங்களான தமிழர்கள் அனைவருக்கும் #தமிழ்புத்தாண்டு வாழ்த்துகளை ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், கடந்தாண்டில் இருந்து ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதன் காரணமாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தமிழில் பதிவிட்டு வருகிறார்.

தமிழ் படங்களில் வரும் பஞ்ச் வசனங்களுடன் அவர் பதிவிடும் ட்வீட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, முன்னணி நடிகர்களான, ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்களில் வரும் வசனங்கள் பெரும்பாலும் இடம்பெறும். இது சென்னை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


Harbhajan Singh, ஹர்பஜன் சிங்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங். (CSK)


இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்தப் புத்தாண்டு தினம் இலங்கையிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங், தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை ட்விட்டரில் தமிழில் தெரிவித்துள்ளார். அதில், “பாசமும், நேசமும் இனிதோடு, நாளைய சூரியவிடியலின் துணையோடு, பல வெற்றிப்படிகளின் கனவோடு, கல்வியும் கலையும் அறிவோடு, உண்மையும் உழைப்பும் உயிரோடு, உறுதிமிகு தமிழா விழிப்போடு, நாளைய உலகம் வெல்க துணிவோடு. தமிழோடும், தமிழரோடும் உறவாடு! நல் உறவோடு! #தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள் அன்பு சொந்தங்களே!” என அவர் கூறியுள்ளார்.


தோனிக்கு 3 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும்: சேவாக்

அப்போ சுரேஷ் ரெய்னா, இப்போ கிறிஸ் கெயில்

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி! முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading