#CSKvRCB | சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

IPL | ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார்.

news18
Updated: March 23, 2019, 11:42 PM IST
#CSKvRCB | சிஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
IPL | ஐபிஎல் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார்.
news18
Updated: March 23, 2019, 11:42 PM IST
சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் தொடக்க போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதை தெடார்ந்து பெங்களூரு அணியின் தெடாக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் பர்த்திவ் பட்டேல் களமிறங்கினார்கள்.

பெங்களூரு அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி 6 ரன்களில் ஹர்பஜன் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும், தென்னாப்பிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் இருவரும் ஹர்பஜன் பந்துவீச்சில் சிக்கினார்கள்.



இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார்கள். இதனால் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அந்த அணியின் பிரதீவ் பட்டேல் அதிகபட்சமாக 29 ரன்கள் குவித்தார்.



சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜடேஜா 2 விக்கெட்களையும், பிரவோ ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 71 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.
Loading...
தொடக்கத்தில் வாட்சன் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எதிரே ராயுடு நிதானமாக விளையாடினார். சுரேஷ் ரெய்னா 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை சுரேஷ் ரெய்னா பெற்றார். இவரை அடுத்து அம்பாத்தி ராயுடுவும் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.



இறுதியில் சென்னை அணி 17.4  ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதனையடுத்து ஐபிஎல் புள்ளி பட்டியிலில் ஒரு வெற்றியுடன் சென்னை அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

Also Watch...

First published: March 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...