#CSKvRR | சேப்பாக்கத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? சி.எஸ்.கே அணியில் என்ன மாற்றம்?

#IPL2019: #CSKVSRR #PREVIEW, #HeadtoHead, Prediction Playing XI | இதுவரை, இரு அணிகளும் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

news18
Updated: April 1, 2019, 3:33 PM IST
#CSKvRR | சேப்பாக்கத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? சி.எஸ்.கே அணியில் என்ன மாற்றம்?
ரஹானே மற்றும் தோனி. (IPL)
news18
Updated: April 1, 2019, 3:33 PM IST
சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு, சென்னை - ராஜஸ்தான் அணிகளில் என்ன மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பார்க்கலாம்.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது.

இரு அணிகளின் பலம் vs பலவீனம்:

சி.எஸ்.கே அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் தொடக்கப் போட்டியில் பலம் வாய்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. 2-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே சி.எஸ்.கே அணி வீழ்த்தியது.

CSK, MS Dhoni
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)


குறிப்பாக வாட்சன், ரெய்னா ஆகியோர் ‘நியூ பால்’ பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளும் திறமை கொண்டவர்கள். இன்றைய போட்டியிலும் ராஜஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர். சஞ்சு சாம்சன் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ் கைகொடுத்தால் இமாலய இலக்கை நிர்ணயிக்க முடியும்.
Loading...
வெற்றி vs தோல்வி விகிதம்:

இதுவரை, இரு அணிகளும் 19 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 12-ல் சென்னை அணியும், 7 -ல் ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது. சேப்பாக்கத்தில் எப்பவும் சென்னைதான் கில்லியாக உள்ளது. அங்கு நடந்த போட்டிகளில் 5-ல் சென்னையும், ஒன்றில் மட்டும் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ப்பூருக்கு வெளியே ராஜஸ்தான் விளையாடிய 9 போட்டிகளில் 7-ல் தோல்வி அடைந்தது. சேப்பாக்கத்தில் நடந்த கடைசி 14 போட்டிகளில் 13-ல் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

சி.எஸ்.கே உத்தேச ஆடும் லெவன் அணி:

ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.

சேப்பாக்கம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் கண்டிப்பாக இருப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

Rajasthan Royals, IPL,
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. (BCCI)


ராஜஸ்தான் உத்தேச ஆடும் லெவன் அணி:

ரஹானே, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கவுதம், ஷ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனத்கட், குல்கர்னி.

சி.எஸ்.கே அணியில் புதிய வீரர் சேர்ப்பு... சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

#IPL2019 | ‘யூனிவெர்சல் பாஸ்’ கிறிஸ் கெய்ல் புதிய வரலாற்று சாதனை!

Also Watch...



POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:





விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: March 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...