#CSKvKKR | கொல்கத்தாவை சமாளிக்குமா சி.எஸ்.கே?

#IPL2019: #CSKVSKKR PREVIEW, Protagonists, Head to Head | இரு அணிகளும் சம பலத்துடன் மோதும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது. #CSKvKKR

Murugesan L | news18
Updated: April 9, 2019, 12:30 PM IST
#CSKvKKR | கொல்கத்தாவை சமாளிக்குமா சி.எஸ்.கே?
தோனி உடன் தினேஷ் கார்த்திக்.
Murugesan L | news18
Updated: April 9, 2019, 12:30 PM IST
சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் அதிரடியை சமாளிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

2019 ஐ.பி.எல் தொடரின் 23-வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வியைப் பெற்றுள்ளன. புள்ளிப்பட்டிலியல் கொல்கத்தா முதலிடத்திலும், சென்னை 2-வது இடத்திலும் உள்ளது.


பலம் Vs பலவீனம்:

இரு அணிகளிலும் சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சென்னை அணிக்கு தோனி மிகப்பெரிய பலமாக இருக்கிறார். நடப்பு சீசனில் அந்த அணி சார்பில் 156 ரன்கள் அடித்து முன்னிலை வகிக்கிறார். டூ பிளெசிஸ் அதிரடி அணியில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் பஞ்சாப் அணிக்கு எதிராக 38 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார்.

Faf du Plessis, CSK, BCCI
அதிரடியாக விளையாடிய டூ பிளெசிஸ். (BCCI)


Loading...

சுரேஷ் ரெய்னா மற்றும் தொடக்க வீரர் அம்பதி ராயுடுவின் ஃபார்ம் கவலை அளிக்கிறது. கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், சுனில் நரைன், உத்தப்பா, ரானா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். இவர்கள் தவிர ரசெல் போட்டியின் தன்மையை எப்போது வேண்டுமானாலும் மாற்றுவார்.

சென்னை அணியில் ஹர்பஜன் சிங், ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரும், கொல்கத்தா அணியில், சாவ்லா, நரைன், குல்தீப் ஆகியோரும் சுழற்பந்து வீச்சில் அசத்த உள்ளனர்.

வெற்றி Vs தோல்வி விகிதம்:

ஐ.பி.எல் தொடரில் இதுவரை 18 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 11-ல் சென்னையும், 7-ல் கொல்கத்தாவும் வென்றுள்ளன. சேப்பாக்கத்தில் நடந்த 8 போட்டிகளில் சென்னை 6-லும், கொல்கத்தா 2-லும் வெற்றி பெற்றன.

இரு அணிகளும் சம பலத்துடன் மோதும் என்பதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது.

களத்தில் இறங்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்! பெருமைப்படும் சுரேஷ் ரெய்னா

Also Watch..






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...