VIDEO: இண்டெர்நெட்டை விட வேகமா? தல தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்!

#IPL2019: #CSKvsKKR, #MSDhoni faster than Broadband internet? | கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

VIDEO: இண்டெர்நெட்டை விட வேகமா? தல தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்!
#IPL2019: #CSKvsKKR, #MSDhoni faster than Broadband internet? | கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • News18
  • Last Updated: April 10, 2019, 12:15 PM IST
  • Share this:
சேப்பாக்கத்தில் நடந்த லீக் போட்டியில், கொல்கத்தா அணியின் ஷுப்மன் கில்லை, சென்னை அணியின் கேப்டன் தல தோனி, பிராட்பேண்ட் இண்டர்நெட்டை விட வேகமாக ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, சென்னை அணியின் அபார பந்துவீச்சால், 20 ஓவர்கள் முடிவில் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்துக் களமிறங்கிய சென்னை அணி, 17.2 ஓவரிகளில் வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.





கொல்கத்தா அணியின் பேட்டிங்கின்போது, 11-வது ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஷுப்மன் கில், பந்தை அடிக்காமல் தவறவிட்டார். அதை பிடித்த விக்கெட் கீப்பர் தோனி, மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார்.

தோனியின் ஸ்டம்பிங் பிராட்பேண்ட் இண்டர்நெட்டை விட வேகமாக இருக்கிறது என வர்ணனையாளர்கள் கூறினர்.



தோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







Also Watch...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading