தோனி பங்கேற்பது சந்தேகம்... டெல்லியை வீழ்த்துமா சென்னை?

#IPL2019: #CSKvsDD Match Today in #Chepauk | பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி அணி, 2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் வந்துள்ளது. #CSKvDD

தோனி பங்கேற்பது சந்தேகம்... டெல்லியை வீழ்த்துமா சென்னை?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)
  • News18
  • Last Updated: May 1, 2019, 2:57 PM IST
  • Share this:
சென்னை சேப்பாக்கத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பில்டஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

நடப்பு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகிறது. அனைத்து அணிகளும் தலா 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், டெல்லி கேப்பிடல்ஸ், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

இரு அணிகளும் 16 புள்ளிகளும் பெற்றுள்ள நிலையில், ரன்ரேட் அடிப்படையில் டெல்லி முதலிடத்திலும், சென்னை 2-வது இடத்திலும் உள்ளது. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இரு அணியும் இந்தப் போட்டியில் வெற்றி பெற போராடும்.


Chennai Super Kings, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)


சென்னை அணியின் கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. 2 நாட்களாக அவர் பயிற்சி செய்யவில்லை என்பதால், இன்றைய போட்டியில் தோனி பங்கேற்பது சந்தேகம்தான்.

பட்டியலில் முதலிடத்தில் உள்ள டெல்லி அணி, 2012-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் வந்துள்ளது. அந்த அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடத்தை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது.ஐ.பி.எல் போட்டியில் விளையாட பஞ்சாப் அணிக்கு தடையா? வெளியானது பரபரப்பு தகவல்!

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்