VIDEO | நம்ப முடியாத வெற்றி... நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர் வீடியோ..!

#IPL2019: #CSK Thriller Victory That roaring #finalover goes viral | கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. #RRvCSK #MitchellSantner

news18
Updated: April 12, 2019, 2:10 PM IST
VIDEO | நம்ப முடியாத வெற்றி... நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர் வீடியோ..!
வெற்றிக் கொண்டாட்டத்தில் சாண்ட்னெரை தூக்கிய ஜடேஜா. (BCCI)
news18
Updated: April 12, 2019, 2:10 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்ற கடைசி ஓவர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.

அடுத்துக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிகவும் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, தோனி 58 ரன்களும், ராயுடு 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் வெற்றிக்கு போராடி தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

MS Dhoni batting, CSK
அரைசதம் அடித்த தோனி. (BCCI)


கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்தார். நோ-பாலாக வீசப்பட்ட 2-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. ஃப்ரீஹிட் பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார். 3-வது பந்தில் தோனி போல்டாகி அதிர்ச்சி அளித்தார்.

4-வது பந்தில் சாண்ட்னெர் 2 ரன்கள் எடுத்தார். அந்தப் பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டு பிறகு, இல்லை என கூறப்பட்டது. 5-வது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது.வொய்ட் மூலம் ஒரு ரன் கிடைக்க, சி.எஸ்.கே வெற்றிக்கு ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் சாண்ட்னெர் சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.

Loading...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்ற கடைசி ஓவர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

VIDEO | நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? தோனியை தாக்கிய மோசமான பவுன்சர்!

ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... உளவு அமைப்புகள் எச்சரிக்கை...!

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

தோனி, அம்பதி ராயுடு அதிரடி! கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி..



 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...