#CSKvKKR | கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை.. ஆமைவேக போட்டியால் கடுப்பாகிய ரசிகர்கள்!

#IPL2019 : #CSK Register Comfortable 7-wicket Win vs #KKR | சென்னை அணி 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தது.

news18
Updated: April 9, 2019, 11:46 PM IST
#CSKvKKR | கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை.. ஆமைவேக போட்டியால் கடுப்பாகிய ரசிகர்கள்!
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஜாதவ் - டூ பிளெசிஸ். (BCCI)
news18
Updated: April 9, 2019, 11:46 PM IST
சேப்பாக்கத்தில் நடந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 23-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றி மற்றும் ஒரு தோல்வியைப் பெற்றுள்ளன.

புள்ளிப்பட்டிலியல் கொல்கத்தா முதலிடத்திலும், சென்னை 2-வது இடத்திலும் உள்ளது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

சென்னை அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசெல் 44 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. மிகவும் பொறுமையாக விளையாடிய அந்த அணி, 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. டூ பிளெசிஸ் 34 ரன்களுடனும், ஜாதவ் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதன்மூலம், சென்னை அணி 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தது.

IPL | காப்பீட்டு நிறுவனத்திடம் ரூ.10 கோடி கேட்டு மிட்செல் ஸ்டார்க் வழக்கு!

VIDEO: மான்கட் அவுட்டில் இருந்து தப்பிக்க வார்னர் செய்த காரியம்... சிரித்த வர்ணனையாளர்கள்!

VIDEO | சகவீரருக்கு மொட்டை அடித்துவிட்ட பிராவோ!

களத்தில் இறங்கிய சி.எஸ்.கே ரசிகர்கள்! பெருமைப்படும் சுரேஷ் ரெய்னா

Also Watch..






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...