ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!

#IPL2019: #CSKFlag and #Dhoniposters are not allowed in #HyderabadStadium | ஹைதராபாத்தில் இன்று இரவு மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. #SRHvCSK

ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!
மைதானத்துக்கு வெளியே சி.எஸ்.கே கொடியுடன் ரசிகர். (Twitter)
  • News18
  • Last Updated: April 17, 2019, 7:21 PM IST
  • Share this:
ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கொடி மற்றும் தோனியின் படங்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத்தில் இன்று இரவு மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி அணி, இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 14 புள்ளிகள் குவித்து பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதை சி.எஸ்.கே உறுதிசெய்யும்.


Chennai Super Kings, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டியை நேரில் பார்ப்பதற்காக, ஏராளமான ரசிகர்கள் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்துக்கு வந்தனர். ஆனால், மைதானத்துக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கொடி மற்றும் தோனியின் படங்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.இதுகுறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

மைதானங்களில் கிரிக்கெட் போட்டி நடைபெறும்போது கொடி மற்றும் புகைப்படங்கள் எடுத்துச்செல்ல அனுமதிப்பது வழக்கம். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதிக்கப்படவில்லை என போட்டி ஒருங்கிணைப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!

VIDEO | வைரலாகும் ஸிவா தோனியின் புதிய வீடியோ!

இந்த முறையாவது கோப்பை வெல்லுமா இங்கிலாந்து? உலகக்கோப்பைக்கான அணி அறிவிப்பு!

VIDEO | கல்லி கிரிக்கெட்டிலும் விஜய் சங்கர் கில்லிதான்!

#SRHvCSK | ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் கால்பதிக்குமா சி.எஸ்.கே?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்!

3D கிளாஸ் ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழுவை கிண்டல் செய்த அம்பதி ராயுடு!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading