ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி இல்லை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

ஹைதராபாத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி இல்லை.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

எம்.எஸ்.தோனி. (BCCI)

எம்.எஸ்.தோனி. (BCCI)

#IPL2019: #CSK Captain Thala #Dhoni missing out the game Against #SRH | ஹைதராபாத்தில் இன்று இரவு மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கூல் கேப்டன் தோனி இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத்தில் இன்று இரவு மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி அணி, இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 14 புள்ளிகள் குவித்து பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதை சி.எஸ்.கே உறுதி செய்யும்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கூல் கேப்டன் தோனி இல்லை. முதுகுப் பகுதியில் ஏற்பட்ட தசைபிடிப்பு காரணமாக அவர் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தோனி இல்லாததால் சி.எஸ்.கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தோனிக்குப் பதிலாக இன்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். டாஸ் வென்ற ரெய்னா பேட்டிங் தேர்வு செய்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தசைபிடிப்பு காரணமாக விலகிய தோனிக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னெருக்குப் பதிலாக கரண் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!

தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!

VIDEO | வைரலாகும் ஸிவா தோனியின் புதிய வீடியோ!

இந்த முறையாவது கோப்பை வெல்லுமா இங்கிலாந்து? உலகக்கோப்பைக்கான அணி அறிவிப்பு!

VIDEO | கல்லி கிரிக்கெட்டிலும் விஜய் சங்கர் கில்லிதான்!

#SRHvCSK | ‘ப்ளே-ஆஃப்’ சுற்றுக்குள் கால்பதிக்குமா சி.எஸ்.கே?: ஹைதராபாத்துடன் இன்று மோதல்!

3D கிளாஸ் ஆர்டர் செய்துள்ளேன்: தேர்வுக்குழுவை கிண்டல் செய்த அம்பதி ராயுடு!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Chennai Super Kings, CSK, IPL 2019, MS Dhoni, Suresh Raina