சி.எஸ்.கேவின் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னாவை வம்புக்கு இழுத்த ரிஷப் பண்ட்-க்கு தோனி ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அடுத்துக் களமிறங்கி டெல்லி அணி, சென்னை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 16.2 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பேட்டிங்கில் 22 பந்துகளில் 44 ரன்கள் விளாசிய தோனி, 2 அட்டகாசமான ஸ்டம்பிங்களை செய்தார். பேட்டிங், கீப்பிங் என இரண்டிலும் அசத்திய தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட தோனி. (BCCI)
இந்தப் போட்டியில் சென்னை அணி பேட்டிங்கின்போது, சுரேஷ் ரெய்னாவை பேட்டிங் செய்ய போகவிடாமல் டெல்லி அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தடுத்தார். இந்த வீடியோவை ஐ.பி.எல் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதற்கு கமெண்ட் செய்த ரசிகர்கள், தோனியிடம் இதை முயற்சிக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.
இம்ரான் தாஹிர் விக்கெட் எடுத்தால் பக்கத்தில்கூட போகமாட்டேன்: சீக்ரெட் உடைத்த தோனி!
தங்க மகள் கோமதிக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு!
ஹிட்மேனின் சாதனையை சமன் செய்த அயர்ன்மேன்... ஐ.பி.எல் வரலாற்றில் புதிய மைல்கல்!
VIDEO | ரசிகர்கள் என்னை ‘தல’ என்றுதான் அழைக்கிறார்கள்: தோனி நெகிழ்ச்சி!
ஸ்டம்பிங்கில் மரணமாஸ் காட்டிய தல தோனி... வைரலாகும் வீடியோ!
Also Watch...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.