சி.எஸ்.கே அணியில் புதிய வீரர் சேர்ப்பு... சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!

#IPL 2019: #CSK announced replacement for injured #LungiNgidi, none for #DavidWilley | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் புதிய வீரர் சேர்க்கப்பட்டதை வெளியிடப்பட்டுள்ளது.

news18
Updated: March 30, 2019, 6:30 PM IST
சி.எஸ்.கே அணியில் புதிய வீரர் சேர்ப்பு... சென்னை ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (Twitter)
news18
Updated: March 30, 2019, 6:30 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் காரணமாக விலகிய லுங்கி இங்கிடிக்கு பதிலாக புதிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் விளையாடிய இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது.

முன்னதாக, ஐ.பி.எல் தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக தொடர் முழுவதும் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது. மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, தோள்பட்டை காயம் குணமாக குறைந்தபட்சம் 4 வாரங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Lungi Ngidi, லுங்கி இங்கிடி
சென்னை அணியில் லுங்கி இங்கிடி. (AFP)


இதனை அடுத்து, இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் டேவிட் வில்லே (29), அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவர் நாடு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. சென்னை அணியில் இருந்து அடுத்தடுத்து வீரர்கள் விலகியதால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில், நியூசிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஸ்காட் குகேஜிலின் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.Scott Kuggeleijn
நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்காட் குகேஜிலின். (Twitter)


ஸ்பின்னுல இத்தனை வெரைட்டியா? எனக்கு 5 விதமான ஸ்பின் தெரியும்... ரஷித் கான் ஓபன் டாக்!

முக்கிய வீரர் விலகல்... சி.எஸ்.கே அணிக்கு பின்னடைவா?

பாகிஸ்தான் பரிதாபங்கள்... 2 வீரர்கள் சதமடித்தும் தோல்வி!

7 பந்துகளில் தொடர்ந்து 7 சிக்ஸர்கள்... யுவராஜ் சிங்கின் சாதனையை தகர்த்தெறிந்த மும்பை வீரர்!

தமிழ் மக்களுக்காக எனது முதல் கானா பாட்டு... இது சும்மா டிரெய்லர் தான்மா..!

VIDEO | மொக்கை வாங்கிய சாக்‌ஷி தோனி... சரியாகச் சொன்ன ஜடேஜா... வயிறு வலிக்க சிரித்த வீரர்கள்...!

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


Also Watch...First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...