கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சிக்சர் மன்னன் கெய்ல், மேலும் ஒரு இமாலய மைல்கல்லை எட்ட 6 ரன்கள் மட்டும் தேவைப்படுகிறது.
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி முதல் இந்தியாவில் களைகட்டி வருகிறது. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல், ஐ.பி.எல் தொடரில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். தன் அதிரடி பேட்டிங்கால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் கிறிஸ் கெய்ல்.
கிரிக்கெட் ரசிகர்கள் அவரை சிக்சர் மன்னன் என்று செல்லமாக அழைக்கின்றனர். அவது பஞ்சாப் அணி நடப்பு சீசனில் முதல் போட்டியில் இன்று விளையாடுகிறது.
ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு தொடங்கும் 4-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியின்மூலம், கெய்ல் மேலும் ஒரு இமாலய மைல்கல்லை எட்ட 6 ரன்கள் மட்டும் தேவைப்படுகிறது.
இன்னும் கெய்ல் 6 ரன்கள் எடுத்தால் ஐ.பி.எல் தொடரில் 4,000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்முன், சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோர் 4,000 ரன்களைக் கடந்துள்ளனர்.
VIDEO: ரிஷப் பண்ட் அடித்த துல்லியமான ஹெலிகாப்டர் ஷாட்!
VIDEO: ஐ.பி.எல் போட்டியில் பும்ராவுக்கு காயம்... உலகக் கோப்பையில் பங்கேற்பதில் சிக்கல்?
#IPL2019: சுரேஷ் ரெய்னா முதல் ரிஷப் பண்ட் வரை சில சுவாரஸ்யமான செய்திகள்
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chris gayle, IPL 2019