ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

#RRvCSK | சி.எஸ்.கே அணி முதலில் பவுலிங்... 100-வது வெற்றியை பெறுவாரா தோனி?

#RRvCSK | சி.எஸ்.கே அணி முதலில் பவுலிங்... 100-வது வெற்றியை பெறுவாரா தோனி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (BCCI)

#IPL2019: Chennai Super Kings Won the Toss and Choose Bowl first | சென்னை அணியில் 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. #RRvCSK

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்தார்.

  ஐ.பி.எல் தொடரின் 25-வது லீக் போட்டியில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

  சென்னை அணி, 6 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.

  சென்னை லெவன் அணி:

  ஷேன் வாட்சன், டூ பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹார், இம்ரான் தாஹிர், ஷர்துல் தாகூர், சாண்ட்னெர்.

  சென்னை அணியில் 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹர்பஜன் சிங், ஸ்காட் நீக்கப்பட்டு, ஷர்துல் தாகூர், சாண்ட்னெர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  ஐ.பி.எல் தொடரில் இதுவரை தோனி 99 போட்டிகளில் கேப்டனாக இருந்து அணியை வெற்றி பெற வைத்துள்ளார். இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று 100-வது வெற்றியை பெறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

  டி-20 போட்டியில் கெய்லை துரத்தும் பொல்லார்டு!

  VIDEO: ஹர்திக், பொல்லார்டு உடன் மோதிய பஞ்சாப் வீரர்!

  முக்கியமான சாதனையை தவறவிட்ட ரோகித் சர்மா!

  ஐ.பி.எல் லீக் போட்டியில் கடைசிப் பந்தில் மும்பை அணி த்ரில் வெற்றி

  Also Watch...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Murugesan L
  First published:

  Tags: Ajinkya Rahane, CSK, IPL 2019, MS Dhoni