#KKRvCSK | ரெய்னா, ஜடேஜா அதிரடி... கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி!

#IPL2019: #ChennaiSuperKings won by 5 wkts Against #KKR | பொறுப்புடன் விளையாடிய ரெய்னா அரைசதம் அடித்து அசத்தினார்.

#KKRvCSK | ரெய்னா, ஜடேஜா அதிரடி... கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி!
வின்னிங் ஷார்ட் அடித்த மகிழ்ச்சியில் ஜடேஜா. (BCCI)
  • News18
  • Last Updated: April 15, 2019, 2:43 PM IST
  • Share this:
கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தொடக்க வீரர்களாக கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் களமிறங்கினார். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்த கொண்டிருக்க, மறுமுனையில் கிறிஸ் லின் அதிரடி காட்டினார். 51 பந்திகளில் 82 ரன்கள் விளாசிய கிறிஸ் லின், இம்ரான் தாஹிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


Imran tahir, இம்ரான் தாஹிர்
இம்ரான் தாஹிர். (BCCI)


மற்ற வீரர்கள் சொற்ப ரன்களைச் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய இம்ரான் தாஹிர் 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்துக் களமிறங்கிய சென்னை அணியில், தொடக்க வீரர் வாட்சன் (6), டு பிளெசிஸ் (24), அம்பதி ராயுடு (5), ஜாதவ் (20), தோனி (16) ஆகியோர் விரைவில் வெளியேறினர். பொறுப்புடன் விளையாடிய ரெய்னா அரைசதம் கடந்தார்.
Suresh Raina, CSK, IPL
அரைசதம் அடித்த ரெய்னா. (BCCI)


கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது. ஹேரி கர்னி வீசிய 19-வது ஓவரில் ஜடேஜா ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரில் 6 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா பவுண்டரி அடித்ததால், பதற்றம் குறைந்தது.

இறுதியில் 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. ரெய்னா 58 ரன்களுடனும், ஜடேஜா 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தேர்தல் ஆணைய தூதராக இருந்தும் டிராவிட் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை!

VIDEO | பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் கோலியைக் கட்டியணைத்த ரசிகர்!

VIDEO | தமிழில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் சி.எஸ்.கே வீரர்கள்... வைரலாகும் வீடியோ!

விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!

தோனிக்கு 3 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்க வேண்டும்: சேவாக்

அப்போ சுரேஷ் ரெய்னா, இப்போ கிறிஸ் கெயில்

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி! முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading