சி.எஸ்.கே-வுக்கு கடல் கடந்து பெருகும் ஆதரவு... கிரிக்கெட் வீரர்கள் உற்சாகம்!

#IPL2019: #ChennaiSuperKings Got Support From #Florida | சி.எஸ்.கே அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் விற்றுதீர்ந்துவிடுவது வழக்கம். #CSKFan

news18
Updated: April 16, 2019, 1:38 PM IST
சி.எஸ்.கே-வுக்கு கடல் கடந்து பெருகும் ஆதரவு... கிரிக்கெட் வீரர்கள் உற்சாகம்!
ரசிகர்களை நோக்கி கையசைக்கும் தோனி. (CSK)
news18
Updated: April 16, 2019, 1:38 PM IST
ஐ.பி.எல் தொடரில் அசத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடல் கடந்து வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு பெருகிவருகிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் 2008-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்றது.

இதுவரை 8 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 7 வெற்றி, ஒரேயொரு தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது.


Chennai Super Kings, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)


சி.எஸ்.கே அணி மற்றும் தோனிக்கு சென்னையில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதன் காரணமாகவே, சி.எஸ்.கே அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் விற்றுதீர்ந்துவிடும்.

Chennai Fan Ticket, ஐபிஎல் டிக்கெட் விற்பனை
ஐ.பி.எல் டிக்கெட் உடன் சென்னை ரசிகர். (Twitter)


Loading...

இந்நிலையில், சி.எஸ்.கே அணிக்கு இந்தியாவைத் தாண்டி கடல் கடந்து வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு பெருகிவருகிறது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருந்து ஆதரவு வந்துள்ளது. அங்குள்ள கிரிக்கெட் ரசிகர்கள் சி.எஸ்.கே-வுக்கு ஆதரவான வசனங்களுடன் பதாகைகளை கையில் வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.ரசிகர்களின் பேராதரவால் கிரிக்கெட் வீரர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது, இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தல தோனியின் ஸ்டைலை பின்பற்றும் ரோகித் சர்மா!

அரசியலால் பிரிந்து நிற்கும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்!

பெங்களூருவை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது மும்பை அணி!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...