சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்... சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி..!

#IPL2019: #ChennaiSuperKings Bowler #LungiNgidi ruled out of tournament | தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

news18
Updated: March 21, 2019, 3:23 PM IST
சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்... சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (AFP)
news18
Updated: March 21, 2019, 3:23 PM IST
ஐ.பி.எல் தொடர் தொடங்க ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முக்கிய வீரர் ஒருவர் விலகியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2019-ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) டி-20 கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 23) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது.

முதற்கட்டமாக முதலிரண்டு வாரங்களில் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், மே 5-ம் தேதி வரை நடைபெறும் ஒட்டுமொத்த லீக் போட்டிகளுக்கான முழு அட்டவணையை ஐ.பி.எல் நிர்வாகம் வெளியிட்டது.

MS Dhoni, எம்.எஸ்.தோனி
வலைப்பயிற்சியில் எம்.எஸ்.தோனி. (CSK)


அனைத்து அணிகளும் தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. தொடக்க போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதனை முன்னிட்டு சென்னை அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக தொடர் முழுவதும் பங்கேற்கமாட்டார் என கூறப்பட்டுள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக குறைந்தபட்சம் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Lungi Ngidi, லுங்கி இங்கிடி
சென்னை அணியில் லுங்கி இங்கிடி. (AFP)
Loading...
இருப்பினும், ஐ.பி.எல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என தென் ஆப்ரிக்கா அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் குடும்பத்துக்கு CSK அணி உதவி!

பேட்ட ஸ்டைலில் தோனிக்கு 3டி மோஷன் போஸ்டர்.. CSK ரசிகர்கள் கொண்டாட்டம்!

Also Watch...

First published: March 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...