என்னோட பார்வையில் இருந்து தப்பவே முடியாது.. வைரலாகும் தோனியின் ரிவியூ வீடியோ!

ரிவியூ கேட்ட தோனி . (BCCI)

#IPL2019: Can't mess with the #DhoniReviewSystem (#DRS) in CSK vs DC | டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #CSKvDC

 • News18
 • Last Updated :
 • Share this:
  டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபயர் 2 போட்டியில் பிரீத்வி ஷா எல்.பி.டபுள்யூ ஆனதை துல்லியமாக கணித்த தோனியின் ரிவியூ வீடியோ வைரலாகி வருகிறது.

  விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் குவாலிஃபையர் 2 போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் சாஹர், ஹர்பஜன் சிங், பிராவோ, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், தாஹிர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  அடுத்துக் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் டூ பிளெசிஸ் மற்றும் வாட்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினர். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவுக்கு ரன்களைச் சேர்க்க 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

  இந்தப் போட்டியில், டெல்லி அணியின் பேட்டிங்கின்போது, 3-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை பிரீத்வி ஷா தவறவிட்டதால் பந்து இடது காலில் பட்டது. சி.எஸ்.கே வீரர்கள் எல்.பி.டபுள்யூ அவுட் கேட்க அம்பயர் தரவில்லை.

  பந்துவீச்சாளர் தீபக் சாஹரிடம் பேசிய தோனி, உடனே ரிவியூ கேட்டார். பந்து ஸ்டம்பை தாக்கும் என துல்லியமாக கணித்த தோனி, 3-வது ஓவரிலேயே ரிவியூ கேட்டார். ரிவியூ முடிவில் அவுட் வழங்கப்பட்டது.  அஜித்தின் மாஸ் டயலாக் உடன் சி.எஸ்.கே வெற்றி குறித்து இம்ரான் தாஹிர் ட்வீட்...!

  VIDEO | ஃபீல்டிங் பரிதாபங்கள்: டெல்லியின் வெற்றியைப் பறித்த தரமான சம்பவம்!

  எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்!

  டெல்லிக்கு ஒரு நாளும் அடிபணிய மாட்டோம் - சிஎஸ்கே வெற்றி குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்

  Also Watch...


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  Published by:Murugesan L
  First published: