ஐ.பி.எல் பரிதாபங்கள்... பவுலர்கள் இல்லாமல் தவிக்கும் சி.எஸ்.கே!

#IPL2019: Big blow for #CSK! #DwayneBravo ruled out for two weeks | அண்மையில் சென்னை அணிக்காக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பிராவோ படைத்தார்.

news18
Updated: April 6, 2019, 11:47 AM IST
ஐ.பி.எல் பரிதாபங்கள்... பவுலர்கள் இல்லாமல் தவிக்கும் சி.எஸ்.கே!
போட்டியின்போது பிராவோவுக்கு ஆலோசனை தரும் தோனி.
news18
Updated: April 6, 2019, 11:47 AM IST
அடுத்தடுத்து வீரர்கள் தொடர்ந்து விலகி வருவதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பவுலர்கள் இல்லாமல் தவித்து வருகிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

ஆனால், வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது.

CSK Team
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (Twitter)


இந்நிலையில், காயத்தால் ஆல்ரவுண்டர் பிராவோ 2 வாரங்களுக்கு விளையாடாத நிலை ஏற்பட்டுள்ளது. டெத் ஓவர்களில் கைகொடுக்கும் இவரின் விலகல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அண்மையில் சென்னை அணிக்காக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை பிராவோ படைத்தார். நடப்பு சீசனில் மட்டும் 4 போட்டிகளில் விளையாடி, 39 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...