VIDEO: டேபிள் டென்னிஸ் போட்டியிலும் கலக்கும் தல தோனி!

#IPL2019: #MSDhoni and #ShreyasIyer faceoff in #TableTennis | டேபிள் டென்னிஸ் போட்டியில் தோனி வெற்றி பெற்றாரா? இல்லையா?

news18
Updated: March 26, 2019, 12:47 PM IST
VIDEO: டேபிள் டென்னிஸ் போட்டியிலும் கலக்கும் தல தோனி!
டேபிள் டென்னிஸ் போட்டியில் தோனி - ஷ்ரேயாஸ் ஐயர்.
news18
Updated: March 26, 2019, 12:47 PM IST
டேபிள் டென்னிஸ் போட்டியில் டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை வீழ்த்திய தோனியின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி முதல் இந்தியாவில் களைகட்டி வருகிறது. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

Dhoni, Shreyas Iyer
தோனி - ஷ்ரேயாஸ் ஐயர்.


டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் 5-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் முதல் போட்டியில் வெற்றி பெற்று, 2-வது வெற்றியை எதிர்பார்த்து களமிறங்க உள்ளன. இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ள நிலையில், கேப்டன் தோனி - எதிரணி கேப்டன் ஷ்ரயாஸ் ஐயருடன் டேபிள் டென்னிஸ் போட்டியில் விளையாடினார்.

Dhoni Table Tennis
டேபிள் டென்னிஸ் விளையாடும் தோனி.


தோனி வெற்றி பெற்றாரா இல்லையா என சொல்லித்தான் தெரிய வேண்டுமா? தோனி இறங்கினாலே வெற்றிதான். இந்த டேபிள் டென்னிஸ் போட்டியிலும் அவரே வெற்றி பெற்றார். தோனி டேபிள் டென்னிஸ் விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
Loading...



Also watch

;
First published: March 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...