IPL 2019 Auction: யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை அறிவிப்பு!

#YuvrajSingh brings down his base price by Rs 1 Crore | கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியால் ரூ 11.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட உனத்கட்டின் அடிப்படை விலை ரூ.1.5 கோடியாக குறைப்பட்டுள்ளது. #IPLAuction

news18
Updated: December 6, 2018, 4:51 PM IST
IPL 2019 Auction: யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை அறிவிப்பு!
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங் (Image: BCCI)
news18
Updated: December 6, 2018, 4:51 PM IST
ஐ.பி.எல் ஏலத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை ரூ. 2 கோடியில் இருந்து ரூ. 1 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

12-வது ஐ.பி.எல் டி-20 போட்டியில் விளையாட இருக்கும் வீரர்கள் ஏலம் வரும் 18-ம் தேதி ஜெய்ப்பூரில் நடத்தப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, கடந்த மாதமே, அனைத்து அணிகளின் நிர்வாகமும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட்டன.

IPL Auction 2019
வீரர்கள் ஏலம் விடும் புகைப்படம் (BCCI)


பெரும்பாலான வீரர்கள் அணி தக்கவைக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 70 வீரர்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இதில், இந்தியாவைச் சேர்ந்த 50 வீரர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 20 வீரர்களும் எடுக்கப்பட இருக்கின்றனர். இதற்கான வீரர்கள் ஏலப்பட்டியலில் வெளிநாட்டு வீரர்கள் 232 பேர் உள்பட மொத்தம் 1003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஏலத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வீரர்களின் ஏலத்துக்கான அடிப்படை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ரூ. 2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட யுவராஜ் சிங்கின் விலை ரூ. 1 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

IPL, SRH
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி (SRH)


அதேபோல், விருத்திமான் சகா, அக்‌ஷர் படேல், முகமது ‌ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோரின் அடிப்படை விலையும் ரூ.1 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியால் ரூ 11.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜெயதேவ் உனட்கட்டின் அடிப்படை விலை ரூ.1.5 கோடியாக குறைப்பட்டுள்ளது.
Loading...
குறிப்பாக, இந்திய வீரர்கள் யாரும் ரூ.2 கோடி அடிப்படை விலைப்பட்டியலில் இடம் பெறவில்லை. மேக்கல்லம், ஷான் மார்ஷ், கோரி ஆண்டர்சன் உள்பட 9 வெளிநாட்டு வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Watch...

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்