IPL 2019: ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் திடீரென ஜெய்ப்பூருக்கு மாற்றம்!

#IPL2019 auction to be held on December 18 in #Jaipur | நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க முடியும். #CSK #Dhoni

news18
Updated: December 4, 2018, 1:26 PM IST
IPL 2019: ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் திடீரென ஜெய்ப்பூருக்கு மாற்றம்!
வீரர்கள் ஏலம் விடும் புகைப்படம் (BCCI)
news18
Updated: December 4, 2018, 1:26 PM IST
2019 ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இருந்து திடீரென ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரானது, கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பு ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் டிசம்பர் 18-ம் தேதி பெங்களூருவில் நடத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏலத்திற்கு முன்பே, அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை அறிவித்தன.

மும்பை வான்கடே மைதானத்திற்குள் நுழையும் சி.எஸ்.கே. வீரர்கள் (IPL)


வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது ஜெய்ப்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் மொத்தம் 70 வீரர்களே பங்கேற்க உள்ளனர். அதில், இந்தியாவைச் சேர்ந்த 50 வீரர்களும், வெளிநாட்டுகளைச் சேர்ந்த 20 வீரர்களும் இடம்பெற உள்ளனர்.

நடப்புச் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க முடியும். ஏனென்றால், 23 வீரர்களை அந்த அணி தக்கவைத்துகொண்டது. சி.எஸ்.கே அணியின் கணக்கில் ரூ. 8.4 கோடி தான் கையிருப்பு உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அதிகபட்சமாக 11 வீரர்களை விடுவித்துள்ளது. மற்ற அணிகளான டெல்லி டேர்வில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகியன ஏலத்தில் போட்டி போட இருக்கின்றன.

IPL, SRH
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி (SRH)
Loading...
2019 உலகக் கோப்பை தொடருக்கு வீரர்கள் தயாராக இருப்பதால், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெரும்பாலான வீரர்கள், நடப்பு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் பார்க்க...

First published: December 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்