மும்பையில் நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐ.பி.எல் தொடரின் 12-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது.
மும்பையில் நேற்று 3-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் செய்தபோது 20-வது ஓவரின் கடைசிப் பந்தை பும்ரா வீசினார். எதிரணி பேட்ஸ்மேன் அடித்த பந்தை தடுக்க டைவ் அடித்தபோது, பும்ரா கீழே விழுந்தார்.
இதில், பும்ராவுக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு கீழே சரிந்தார். அவரால் தனது இடதுகையை தூக்க முடியவில்லை. பின்னர், மருத்துவக்குழு உதவியுடன் மைதானத்துக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வருவதாக டெல்லி அணி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பங்கேற்பாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
bumrah injury
video: star sports pic.twitter.com/kPYOU8gkN6
— dhoni rohit fan (@dhonirohitfan1) March 24, 2019
#IPL2019: சுரேஷ் ரெய்னா முதல் ரிஷப் பண்ட் வரை சில சுவாரஸ்யமான செய்திகள்
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2019, Jasprit bumrah