11 வருடங்களுக்கு முன்பு, தோனிக்கு சி.எஸ்.கே கொடுத்த விலை இதுதான்! வைரல் ட்வீட்

#IPL2008: Costliest Player #MSDhoni Sold Out To #CSK | 2008-ல் முதன் முறையாக ஐ.பி.எல் போட்டி நடத்தப்பட்டது.

news18
Updated: May 12, 2019, 5:30 PM IST
11 வருடங்களுக்கு முன்பு, தோனிக்கு சி.எஸ்.கே கொடுத்த விலை இதுதான்! வைரல் ட்வீட்
2008-ல் எம்.எஸ்.தோனி.
news18
Updated: May 12, 2019, 5:30 PM IST
11 வருடங்களுக்கு முன்பு, 2008-ல் முதன் முதலாக ஐ.பி.எல் தொடரில் தல தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வளவு விலை கொடுத்து வாங்கியது என்ற விவரம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் 12-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது குவாலிஃபையர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி 8-வது முறையாக நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.


CSK vs MI
ரோகித் சர்மா - எம்.எஸ்.தோனி.


இதுவரை, இரு அணிகளும் தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. அதனால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெற உள்ளது.

இந்நிலையில், 11 வருடங்களுக்கு முன்பு, 2008-ல் முதன் முதலாக ஐ.பி.எல் தொடரில் தல தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எவ்வளவு விலை கொடுத்து வாங்கியது என்ற விவரம் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.

Loading...

ஐ.பி.எல் வீரர்களை ஏலம் விடுவதில் மிகவும் பிரபலமானவர் ரிச்சர்ட் மேட்லி. இவர் தனது ட்விட்டரில் 2008-ல் வீரர்கள் ஏலம் விட்டபோது விலை குறித்து வைக்கப்பட்டதை தற்போது வெளியிட்டுள்ளார். அதில், 40,000 அமெரிக்க டாலர்களை அடிப்படை விலையாகக் கொண்ட மகேந்திர சிங் தோனியை, 1.5 மில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10 கோடி) டாலருக்கு சென்னை சூப்பர் கிஸ் அணி வாங்கியுள்ளது.தற்போது, இந்த விவரம் ட்விட்டரில் வைரலாகப் பரவி வருகிறது.

#IPLFinalWeather: இறுதிப்போட்டியில் மழையா? ரசிகர்கள் அச்சம்... ஹைதராபாத் வானிலை நிலவரம்!

டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிருக்கு தென் ஆப்ரிக்கா அழைப்பு? சி.எஸ்.கே அதிர்ச்சி!

CSK-க்கு இறுதிப்போட்டியில் இப்படியொரு கண்டம் இருக்கு... புள்ளி விவரம் சொல்லும் உண்மை!

 

Also Watch...

VIDEO | ஸிவா தோனியிடம் பாடம் கற்கும் ரிஷப் பண்ட்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

என்னோட பார்வையில் இருந்து தப்பவே முடியாது.. வைரலாகும் தோனியின் ரிவியூ வீடியோ!

அஜித்தின் மாஸ் டயலாக் உடன் சி.எஸ்.கே வெற்றி குறித்து இம்ரான் தாஹிர் ட்வீட்...!

VIDEO | ஃபீல்டிங் பரிதாபங்கள்: டெல்லியின் வெற்றியைப் பறித்த தரமான சம்பவம்!

எங்க சங்கம் இருந்துச்சுன்னா சம்பவம் கண்டிப்பா இருக்கும் - ஹர்பஜன் சிங்!

டெல்லிக்கு ஒரு நாளும் அடிபணிய மாட்டோம் - சிஎஸ்கே வெற்றி குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...