“எனக்காக கங்குலி கொடுத்த உணவை சாப்பிட்டு இருக்கிறேன்“ - இன்சமாம் பதிலடி

“எனக்காக கங்குலி கொடுத்த உணவை சாப்பிட்டு இருக்கிறேன்“ - இன்சமாம் பதிலடி
இன்சமாம்-உல்-ஹக்
  • Share this:
எனக்காக கங்குலி கொடுத்த உணவை சாப்பிட்டு இருக்கிறேன் என கனேரியாவின் குற்றச்சாட்டிற்கு இன்சமாம் பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் கனேரியா. இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இங்கிலாந்து நாட்டில் 2012ம் ஆண்டு நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் போட்டியின் போது ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டில் சிக்கியதால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

இவர் இந்து என்பதால் பாகிஸ்தான் வீரர்கள் சிலர் இவருடன் அமர்ந்து உணவு சாப்பிட விரும்பயதில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் அக்தர் கூறியிருந்தார். என் மீதான மத ரீதியலான தாக்குதலை வெளிப்படையாக கூறிய அக்தருக்கு நன்றி என கனேரியா தெரிவித்து இருந்தார்.


இந்த விவகாரம் குறித்து வாய்திறக்காமல் இருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் தற்போது விளக்கமளித்துள்ளார். அதில், “நான் கேப்டனாக இருந்த போது கனேரியா அதிக போட்டிகளில் விளையாடி உள்ளார். பாகிஸ்தான் அணியில் மத பகுபாடு எப்போதும் கிடையாது. சக்லைன் முஸ்தாக்கை அணியில் சேர்ப்பதைக் காட்டிலும் கனேரியாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அணி தேர்வாளர்களிடம் நான் கூறி இருக்கிறேன்.

இந்திய அணி 15 ஆண்டுகளுக்கு பின் 2004-ம் ஆண்டு பாகிஸ்தான் வந்த போது அனைவரும் இன்முகத்துடன் வரவேற்றனர். பாகிஸ்தானில் அவர்கள் சென்று ஷாப்பிங், உணவு சாப்பிட்ட போது யாரும் பணம் வாங்கவில்லை. அடுத்த ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியா பயணம் சென்ற போதும் இதுபோன்றே நடந்தது.

2005-ம் ஆண்டு இந்திய பயணத்தின் போது கொல்கத்தாவில் கங்குலியின் ரெஸ்டாரண்டுக்கு சென்றோம். நானும், தெண்டுல்கரும் இந்த உணவு விடுதியை திறந்து வைத்தோம். அப்போது எனக்காக கங்குலி கொடுத்த உணவுகளை நான் சாப்பிட்டேன்.கங்குலி கொடுத்த உணவை சாப்பிட்ட போது சக வீரரான கனேரியாவுடன் உணவு சாப்பிட தயங்கி இருப்பேனா என என்று கூறியுள்ளார்.
First published: December 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading