முகப்பு /செய்தி /விளையாட்டு / இன்டர்நேஷனல் லீக் டி20 : சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி…

இன்டர்நேஷனல் லீக் டி20 : சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி…

கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி.

கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி.

ஐ.எல்.டி20 தொடர் நடப்பாண்டில்தான் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

துபாயில் நடைபெற்று வந்த இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் டிசர்ட் வைபர்ஸ் அணியை வீழ்த்தி கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. சர்வதேச வீரர்கள் பங்கேற்ற இன்டர்நேஷனல் லீக் டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் கடந்த மாதம் 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கல்ஃப் ஜெயன்ட்ஸ், டிசர்ட் வைபர்ஸ், எம்.ஐ. எமிரேட்ஸ், துபாய் கேபிடல்ஸ், ஷார்ஜா வாரியர்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்றன.

லீக் போட்டியின் முடிவில் ஷார்ஜா மற்றும் அபுதாபி அணிகள் வெளியேறின. அரையிறுதி போட்டிகளுக்கு பின்னர் கல்ஃப் ஜெயன்ட்ஸ் மற்றும் டிசர்ட் வைபர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டிசர்ட் வைபர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஹசரங்கா 55 ரன்களும், சாம் பில்லிங்ஸ் 31 ரன்களும் எடுத்தனர். ஜெயன்ட்ஸ் அணி தரப்பில் பிராத்வெய்ட் 3 விக்கெட்டுகளையும், கைஸ் அகமது 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் கிறிஸ் லின் 50 பந்துகளில் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஷிம்ரோன் ஹெட்மேயர் 13 பந்துகளில் 25 ரன்களை அதிரடியாக சேர்த்தார். ஐ.எல்.டி20 தொடர் நடப்பாண்டில்தான் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.

First published:

Tags: Cricket