பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் லாலாஜி மெமோரியல் ஒமேகா சர்வதேச பள்ளி மாணவன் அபினவ் கண்ணன் 280 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பள்ளி அளவிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை அமீர் மஹாலில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டம் ஒன்றில் லாலாஜி மெமோரியல் ஒமேகா சர்வதேச பள்ளி - சின்மயா வித்யாலயா பள்ளிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த லாலாஜி மெமோரியல் ஒமேகா சர்வதேச பள்ளி 50 ஓவர்கள் முடிவில் 591 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபினவ் கண்ணன் மற்றும் ஸ்ரீனிக் ஆகியோர் இரட்டை சதம் விளாசி சாதனபடைத்துள்ளனர்.
Also Read : டி20 உலகக்கோப்பை அணியில் புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர் தேவையில்லை
அபினவ் கண்ணன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 280 ரன்கள் குவித்துள்ளார். 145 பந்துகள் எதிர்கொண்ட அபினவ் 42 பவுண்டரிகளை விளாசியுள்ளார். 142 பந்துகள் எதிர்கொண்ட ஸ்ரீனிக் 227 ரன்கள் குவித்துள்ளார். இதில் 32 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கும் என்பது குறிப்பிடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.