சுப்மன் கில்லுக்கு பதில் பிரிதிவி ஷா?- கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வாலை அவமானப்படுத்துவதா?- கபில் தேவ் விளாசல்

ராகுல், அகர்வாலைத் தேர்வு செய்து விட்டு அவர்கள் வேண்டாம் இன்னொரு வீரர் கொடு என்பது மரியாதை அல்ல அவமதிப்பு.

ராகுல், அகர்வாலைத் தேர்வு செய்து விட்டு அவர்கள் வேண்டாம் இன்னொரு வீரர் கொடு என்பது மரியாதை அல்ல அவமதிப்பு.

 • Share this:
  இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து ஷுப்மன் கில் காயம் காரணமாக விலகி இந்திய திரும்புவதையடுத்து பிரிதிவி ஷா அணியில் தேர்வு செய்யப்படுவதாக எழுந்த செய்திகள் கபில் தேவின் கடும் காட்டத்துக்கு ஆளாகியுள்ளது.

  சுப்மன் கில் காயத்தினால் இந்தியா திரும்பவுள்ளார். இந்நிலையில் ரவி சாஸ்திரியும் கோலியும் பிரிதிவி ஷா-வை இங்கிலாந்துக்கு அனுப்புமாறு கோரியதாக எழுந்த செய்திகளையடுத்து கபில் தேவ் கடும் காட்டமாக தவறைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

  ஏற்கெனவே இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் உள்ளனர். இவர்களில் ஒருவரை தொடக்க வீரராக இறக்குவதை விடுத்து இங்கிருந்து பிரிதிவி ஷாவை அனுப்பச் சொல்வது என்ன நியாயம் என்கிறார் கபில்தேவ்.

  Also Read: மேட்சுக்கு முன்பு உடலுறவு.. உலகக்கோப்பை வெற்றி.. ரகசியம் சொல்லும் ’தி பேர் ஃபுட் கோச்’ புத்தகம்

  பிரிதிவி ஷா இப்போது இலங்கையில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

  இந்நிலையில் கபில் தேவ் இது தொடர்பாகக் கூறும்போது, “பிரிதிவி ஷா-வை அழைக்கத் தேவை எதுவும் இல்லை. அணித்தேர்வுக்குழுவுக்கு மதிப்பளிக்க வேண்டும். இது சாஸ்திரி, கோலியின் முடிவாகவே இருக்க வாய்ப்பு அதிகம்.

  மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் என்ற பெரிய தொடக்க வீரர்கள் உள்ளனர். 3வது வீரர் தேவையா? இது சரியானது என்று நான் கருதவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொள்கை அளவிலேயே இது தப்பு. ஏற்கெனவே உள்ள தொடக்க வீரர்கள்தான் விளையாட வேண்டும், ஷா-வை அழைத்தால் அது மற்றவர்களை அவமதிப்பதாகும். கேப்டனும் அணி நிர்வாகவும் ஆலோசனை கூறலாம், ஆனால் இவர்கள் கூறுவதைத்தான் தேர்வுக்குழு செய்ய வேண்டும் என்பது சரியல்ல, பின் எதற்கு அணித்தேர்வுக்குழு இருக்கிறது? ரவி சாஸ்திரியும் விராட் கோலியும்தான் இதற்குப் பதில் அளிக்க வேண்டும்.

  ராகுல், அகர்வாலைத் தேர்வு செய்து விட்டு அவர்கள் வேண்டாம் இன்னொரு வீரர் கொடு என்பது மரியாதை அல்ல அவமதிப்பு. ராகுல், அகர்வால் பெரிய வீரர்கள்தான், இப்படிப்பட்ட ஒன்று நடப்பதை நான் விரும்பவில்லை. தேவையற்ற சர்ச்சைகளை இது ஏற்படுத்தி விடும்” என்று கபில் தேவ் ஊடகம் ஒன்றில் சாடியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: