‘பேபி சிட்டர்’ விளம்பரம்... சம்பவத்தில் சம்மந்தப்பட்ட ரிஷப் பண்ட் போட்ட சுவாரஸ்யமான ட்வீட்...!

Rishabh Pant reacts to Virender Sehwag's babysitter ad | ஆஸ்திரேலிய வீரர்களைக் கிண்டலடிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

news18
Updated: February 13, 2019, 4:39 PM IST
‘பேபி சிட்டர்’ விளம்பரம்... சம்பவத்தில் சம்மந்தப்பட்ட ரிஷப் பண்ட் போட்ட சுவாரஸ்யமான ட்வீட்...!
ரிஷப் பண்ட் மற்றும் சேவாக்.
news18
Updated: February 13, 2019, 4:39 PM IST
சேவாக் நடித்திருக்கும் ‘பேபி சிட்டர்’ விளம்பரத்தை பார்த்துவிட்டு உண்மையான ‘பேபி சிட்டர்’ ரிஷப் பண்ட் தனது ட்விட்டரில் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. போட்டிகளின்போது இரு அணி வீரர்கள் இடையிலான ஸ்லெட்ஜிங் அதிக கவனம் பெற்றது.

குறிப்பாக, இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டை, ‘பேபி சிட்டர்’ என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கிண்டல் செய்தார்.

Rishab Pant, ரிஷப் பண்ட்.
ஆஸி. கேப்டன் டிம் பெய்னைக் கிண்டல் செய்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். (Video Grab)


அதற்கு பதிலடியாக, டிம் பெய்னை தற்காலிக கேப்டன் என்று ரிஷப் பண்ட் கிண்டல் செய்தார். இதனை அடுத்து, டிம் பெய்னின் சவாலை ஏற்கும் விதமாக அவரின் குழந்தையை ரிஷப் பண்ட் தூக்கிய வைத்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.

ரிஷப் பண்ட், Rishab Pant
ஆஸி. கேப்டன் டிம் பெய்னின் குழந்தை உடன் ரிஷப் பண்ட். (Twitter)


வரும் 24-ம் தேதி ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இதனை மையப்படுத்தி இந்தப் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் இந்த ‘பேபி சிட்டர்’ விளம்பரத்தை எடுத்துள்ளது.
Loading...
அதில், ஆஸ்திரேலிய அணியின் ஜெர்சி அணிந்துள்ள சிறுவர்களுடன், முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் நடித்துள்ளார்.ஆஸ்திரேலிய வீரர்களைக் கிண்டலடிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக இந்த வீடியோவைப் பார்த்த அந்த அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

#BeWarned Never take Aussie’s for a joke Viru Boy @virendersehwag @StarSportsIndia Just remember who’s baby sitting the #WorldCup trophy https://t.co/yRUtJVu3XJஅவரது ட்விட்டரில், “உங்களை எச்சரிக்கிறேன். ஆஸ்திரேலியர்களை ஒருபோதும் நகைச்சுவையாக எடுக்காதீர்கள்.. வீரு பாய். உலகக்கோப்பை யாரிடம் இருக்கிறது என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்” என காட்டமாக கூறியுள்ளார்.

இந்நிலையில், ‘பேபி சிட்டர்’ விளம்ரம் குறித்து இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், “எப்படி நல்ல கிரிக்கெட் வீரராகவும், குழந்தை பராமரிப்பாளராகவும் இருக்க வேண்டும் என்பதை சேவாக் பாய் காண்பித்துள்ளார். எப்போது அவர் இன்ஸ்பிரேசனாக இருக்கிறார்,” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.தோனி செய்த ஸ்டம்பிங் அவுட் இல்லை? நடுவர் தீர்ப்பு குறித்து ஐசிசி ஆய்வு

Also Watch...

First published: February 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...