ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

என்னாச்சு ரோஹித் சர்மாவிற்கு..? அரையிறுதி போட்டிக்கு முன் காயம்

என்னாச்சு ரோஹித் சர்மாவிற்கு..? அரையிறுதி போட்டிக்கு முன் காயம்

கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு காயம்

கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு காயம்

டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன் வலைபயிற்சியில் ஈடுபட்ட கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி மோத உள்ளது. இந்த போட்டியை முன்னிட்டு இந்திய அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா த்ரோ ஸ்பெஷலிஸ்ட் ரகுவிடமிருந்து த்ரோ டவுன்களை எடுத்து கொண்டிருந்த போது வலது முன்கையில் அடிப்பட்டுள்ளது.

  ரோஹித் சர்மா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பேட்டை கீழே போட்டு வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அணியின் பிசியோ கமேஷ் ஜெயின் மற்றும் குழு மருத்துவர் சார்லஸ் மின்ஸ் விரைந்து சென்று ரோஹித் காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் காயத்தை ஆய்வு செய்தார்.

  ஆனால் ரோஹித் சர்மா 40 நிமிடங்களுக்கு பின் மீண்டும் பேட்டிங் செய்ய தொடங்கினார். அவரது காயம் தீவிரமாக இல்லை என்று கூறப்படுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணி தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார். ஓபனிங்கில் அவரது அதிரடி அணிக்கு மிகவும் பலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது கையில் காயம் ஏற்பட்டது அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சிட்னியில் நாளை (செப்டம்பர் 08) மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Rohit sharma, T20 World Cup