இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் : முக்கிய வீரர்கள் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய அணி

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வீரர்கள் பயிற்சியின் போது அடுத்தடுத்து காயமடைந்து வருவது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

  • Share this:
    இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது. இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டியின் முடிவு இங்கிலாந்துக்கு சாதகமானது.

    இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை (ஆகஸ்ட் 12) தொடங்க உள்ளது. இதனால் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சர்துல் தாகூர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சர்துல் தாகூருக்கு தொடை எலும்பு பிரச்னை காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின் அணியில் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Also Read : திடீரென மயங்கி விழுந்து  உயிருக்கு போராடும் கிறிஸ் கெய்ர்ன்ஸ்

    அதேப் போன்று இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிராட் காயமடைந்துள்ளார். வலது கணுக்காலில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் விலகலாம். இங்கிலாந்து அணியில் ஏற்கனவே காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் விளையாடமால் உள்ளனர்.

    Also Read : பாகிஸ்தான் வேண்டாம், ஐபிஎல் தான் வேண்டும்: முடிவெடுத்த 4 வீரர்கள் யார் தெரியுமா?

    தற்போது பிராட் காயமடைந்துள்ளது இங்கிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பிராட் 2-வது டெஸ்ட்டிலிருந்து விலகினால் அவருக்கு பதிலாக மார்க் உட் களமிறங்குவார் என கூறப்படுகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானம் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் 2-வது டெஸ்ட் போட்டியிலும் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vijay R
    First published: