ICC WORLD CUP: காயம் காரணமாக ஷிகர் தவான் விலகல்

ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் வீசிய 9-வது வீரரில் ஷிகர் தவான் மணிக் கட்டில் காயம் ஏற்பட்டது. ஷிகர் தவானுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அப்போது, அவர் 24 ரன்களில் இருந்தார்.

News18 Tamil
Updated: June 11, 2019, 2:36 PM IST
ICC WORLD CUP: காயம் காரணமாக ஷிகர் தவான் விலகல்
சதம் அடித்த ஷிகர் தவான். (BCCI)
News18 Tamil
Updated: June 11, 2019, 2:36 PM IST
ஆஸ்திரேலியாவுக்கான எதிரானப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகியுள்ளார்.

பத்து நாடுகள் பங்கேற்றுள்ள உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து நடைபெற்றுவருகிறது. இருதினங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி மோதிய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் அதிரடியாக ஆடி சதம் கடந்தார்.

ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் வீசிய 9-வது வீரரில் ஷிகர் தவான் மணிக் கட்டில் காயம் ஏற்பட்டது. ஷிகர் தவானுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அப்போது, அவர் 24 ரன்களில் இருந்தார். இருந்தும் தொடர்ச்சியாக ஆடி 100 ரன்களைக் கடந்தார். காயம் காரணமாக, அந்தப் போட்டியில் ஃபீல்டிக் செய்யவில்லை. தற்போது, காயம் காரணமாக வரும் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

இந்தச் செய்தியை, உலகக் கோப்பைப் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வெஸ்ட் இன்டிஸ், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் ஷிகர் தவான் பங்கேற்க வாய்ப்பில் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக, தொடக்க வீரராக கே.எல்.ராகுல் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see:

First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...