Home /News /sports /

ரிஷப் பண்ட்டிடம் சாத்து வாங்கிய உம்ரன் மாலிக்- இந்திய அணி தீவிர வலைப்பயிற்சி

ரிஷப் பண்ட்டிடம் சாத்து வாங்கிய உம்ரன் மாலிக்- இந்திய அணி தீவிர வலைப்பயிற்சி

உம்ரன் மாலிக் வலைப்பயிற்சியில்

உம்ரன் மாலிக் வலைப்பயிற்சியில்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி வரும் 9ம் தேதி தொடங்கும் நிலையில் இந்திய அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது, உம்ரன் மாலிக் வலையில் பந்து வீசினார், அவர் லெந்த்தை இன்னும் கொஞ்சம் ஒர்க் அவுட் செய்ய வேண்டியுள்ளது, இன்று வலையில் ரிஷப் பண்ட் இவரது பந்துகளை சாத்தி எடுத்து விட்டார். பிறகு ஒருவாறு மீண்டு ரிதமுடன் வீசினார் உம்ரன் மாலிக்.

மேலும் படிக்கவும் ...
    இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி வரும் 9ம் தேதி தொடங்கும் நிலையில் இந்திய அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளது, உம்ரன் மாலிக் வலையில் பந்து வீசினார், அவர் லெந்த்தை இன்னும் கொஞ்சம் ஒர்க் அவுட் செய்ய வேண்டியுள்ளது, இன்று வலையில் ரிஷப் பண்ட் இவரது பந்துகளை சாத்தி எடுத்து விட்டார். பிறகு ஒருவாறு மீண்டு ரிதமுடன் வீசினார் உம்ரன் மாலிக்.

    1988-89களில் சச்சின் டெண்டுல்கரின் பெயர் எப்படி கிரிக்கெட் வட்டாரங்களில் தினமும் சப்தம் எழுப்பியதோ அதே அளவுக்கு இப்போது உம்ரன் மாலிக்கிற்கு எழுப்புகிறது என்று கூற முடியாவிட்டாலும் எதிரப்பார்ப்பு உம்ரன் மாலிக் மீது பயங்கரமாக இருக்கிறது.

    இன்று வலையில் கேப்டன் கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ருதுராஜ் வலையில் முதலில் பேட் செய்தனர். 4வது வலைக்கருகே உம்ரன் மாலிக் தசைத் தளர்வு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ராகுல் திராவிட் மேற்பார்வையில் உம்ரன் மாலிக் குறைந்த ரன் அப்பில் சில பந்துகளை வீசினார். பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரேயும் நின்று கொண்டிருந்தார்.

    உம்ரன் மாலிக் 3 அடி தூரமே ஓடி வந்து பந்தை வீசினார். இவர் முதலில் தன் இறுகிய தசைகளை தளர்த்திக் கொள்ளட்டும் என்பதாக பயிற்சி இருந்தது. ஷ்ரேயஸ் அய்யர் முதலில் உம்ரனை எதிர்கொண்டார், முழு ரன் அப்பில் வீசாவிட்டாலும் பந்துகள் சீறின, சில பந்துகள் அய்யர் மட்டையைக் கடந்து வேகமாகச் சென்றது.



    பக்கத்து வலையில் கே.எல்.ராகுலின் ஸ்லாக் ஸ்வீப்கள், இஷான் கிஷனின் ஷாட்கள், கவனத்தை ஈர்த்தாலும் உம்ரன் மாலிக் மீதே அங்கிருப்பவர்களின் கவனம் கூடியது. ஆனால் திடீரென முழு ரன் அப்பில் வேகமாக வீசுவதற்கு முன்பே ராகுல் திராவிட் உம்ரன் மாலிக்கிடம் ஏதோ பேசினார், அவர் உடனே அருகில் இருந்த இடத்தில் போய் அமர்ந்தார்.

    சரி இனி வீசமாட்டார் என்று நினைத்த போது உம்ரன் மாலிக் மீண்டும் வந்தார், அவர் இந்த முறை ரிஷப் பண்ட்டிற்கு வீசினார். இப்போது அவரது வழக்கமான முழு வேகத்துடன் வீசினார். ரிஷப் பண்ட் மிகவும் எளிதாக இவரை ஆடினார். ஆனால் ரிஷப் பண்ட் உம்ரன் மாலிக் லெந்த் ஷார்ட் ஆகும் போதெல்லாம் கருணை காட்டாமல் அடித்து நொறுக்கினார். பண்ட்டிற்கு மிகவும் ஷார்ட் ஆக வீசியதால் பண்ட் அவரை சாத்தி எடுத்ததுதான் நடந்தது.

    உடனே பராச் மாம்ப்ரே உம்ரன் மாலிக்கை தீபக் ஹூடாவுக்கு வீச அழைத்தார். பண்ட்டிடம் வாங்கிய அடியினால் கொஞ்சம் ஏமாற்றமடைந்த உம்ரன் மாலிக் ஹூடாவுக்கு நன்றாக வீசினார், ஒருமுறை எட்ஜ் ஆகி கேட்சும் ஆனது. ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மிக நன்றாக வீசியதாகவும் உம்ரன் மாலிக் கொஞ்சம் ஏமாற்றமளித்ததாகவும் வலைப்பயிற்சியை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் தீபக் ஹூடாவுக்கு உம்ரன் மாலிக் வீசிய யார்க்கர் அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, T20

    அடுத்த செய்தி