ஓவல் டெஸ்டில் இங்கிலாந்து முன்னிலை... இந்தியா நிதான தொடக்கம்

India vs England

ஓவல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில், இந்திய அணியைக் காட்டிலும் 999 ரன்கள் கூடுதலாக இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

 • Share this:
  ஓவல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில், இந்திய அணியைக் காட்டிலும் 99 ரன்கள் கூடுதலாக இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

  இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்ததால், 191 ரன்களில் ஆட்டமிழந்தது.

  இதன் பின்னர், ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஹசீப் ஹமீது ரன் கணக்கை தொடங்காமலும், ரோரி பர்ன்ஸ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரையும் பும்ரா வெளியேற்றினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி, 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 சேர்த்தது.

  இரண்டாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே கிரேக் ஓவர்டானை, உமேஷ் யாதவ் வெளியேற்றி நெருக்கடி கொடுத்தார்.மளமளவென விக்கெட்டுகளை இழந்தபோதும் போப்பின் சிறப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து இங்கிலாந்து மீண்டது.

  சிறப்பாக விளையாடிய ஓலி போப் 81 ரன்கள் சேர்த்து தாகூர் பந்துவீச்சில் வெளியேறினார். 9-வது விக்கெட்டாக களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ் அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.

  இதையடுத்து இராண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 20 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: