Home /News /sports /

இம்ரான் கானின் பேச்சைக் கேட்காத பாகிஸ்தான் அணி!

இம்ரான் கானின் பேச்சைக் கேட்காத பாகிஸ்தான் அணி!

இம்ரான் கான்

இம்ரான் கான்

ICC World Cup 2019 | India vs Pakistan | Imran khan | பாகிஸ்தான் அணி டாஸ் வென்றும் பந்துவீச்சை தேர்வு செய்து, இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யுமாறு பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் மற்றும் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் அறிவுரை கூறியிருந்த நிலையில், டாஸ் வென்றும் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றபோது கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான் கான், பாகிஸ்தான் வீரர்களுக்கு மூன்று டிப்ஸ்-ஐ அளித்தார். அதில் கிரிக்கெட் போட்டியில் முக்கிய பங்கு வகிப்பது மன வலிமை தான் என்றும் போட்டியில் ஏற்படும் அழுத்தத்தின் போது இந்திய அணியால் சரியாக விளையாட முடியாது என்பதால் பாகிஸ்தான் கேப்டனான சர்பராஸ் அகமது முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.











மேலும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பயமின்றி விளையாடுமாறும் பாகிஸ்தான் அணியை அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அந்த அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து, இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... இங்கிலாந்து மைதானமா? இந்தியாவின் கோட்டையா? மிரளவிட்ட ரசிகர்கள்





உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: ICC Cricket World Cup 2019, India vs Pakistan, PM Imran Khan

அடுத்த செய்தி