இந்தியா-வங்கதேசம் இடையே இரண்டாவது 20 ஓவர் போட்டி, ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3-டி 20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. அந்தப் போட்டியில் வங்கதேச அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதையடுத்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மைதானத்தில் இரண்டாவது டி 20 போட்டி இன்று நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில், வெற்றிபெற்று, முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் வங்கதேச அணி ஈடுபட்டுள்ளது.
அரபிக்கடலில் நிலவிவரும் மகா புயல், குஜராத்தில் இன்று கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ராஜ்கோட் நகரில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. எனவே, இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.