முகப்பு /செய்தி /விளையாட்டு / #AUSvIND இந்தியா அபார வெற்றி - தொடரில் முன்னிலை

#AUSvIND இந்தியா அபார வெற்றி - தொடரில் முன்னிலை

வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள். (BCCI)

வெற்றிக் கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள். (BCCI)

37 ஆண்டுகளுக்குப் பின் மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

புஜாரா (106), விராட் கோலி (82), ரோகித் சர்மா (63) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மெல்போர்னில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால், 151 ரன்களில் சுருண்டது. பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஆஸி.க்கு ‘பலோ ஆன்’ கொடுக்காமல், 296 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-ம் இன்னிங்சை தொடங்கியது. 3-ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது.

4-ம் நாள் ஆட்டம் இன்று (29.12.18) தொடர்ந்த நிலையில், 8 விக்கெட்டுகளுக்கு 106 ரன்கள் எடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதன்மூலம், 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்கவீரர்கள் பிஞ்ச் (3) மற்றும் ஹாரிஸ் (13) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

கவாஜா (33), ஷேன் மார்ஷ் (44), மிச்செல் மார்ஷ் (10), டிராவிஸ் ஹெட் (34) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினர். ரன் சேர்க்க போராடிய கேப்டன் டிம் பெய்ன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார்.

4-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. பேட் கம்மின்ஸ் 61 ரன்களுடனும், நாதன் லியோன் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

5-ம் நாள் ஆட்டம் இன்று மழை காரணமாக மிக தாமதமாகவே தொடங்கியது. லியோன் மற்றும் கம்மின்ஸ் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 261 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம், இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா இரண்டு வெற்றிகளுடன் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

37 ஆண்டுகளுக்குப் பின் மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்தியா பெறும் 150-வது வெற்றி இதுவாகும்.

கடைசி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும், தொடர் சமன் அடையும் என்பதால், பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இந்தியா தக்கவைத்துள்ளது.

34 ஆண்டுகால உலக சாதனையைத் தகர்த்த மும்மூர்த்திகள்!

Also See..

First published:

Tags: Ind Vs Aus, India vs Australia 2018