முகப்பு /செய்தி /விளையாட்டு / IND vs AUS இந்தூர் டெஸ்ட் : முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்!!

IND vs AUS இந்தூர் டெஸ்ட் : முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட்!!

ஆட்டமிழந்து வெளியேறும் விராட் கோலி

ஆட்டமிழந்து வெளியேறும் விராட் கோலி

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குன்மன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லியோன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தூரில் நடைபெற்று வரும் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3 ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், இந்திய  அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3ஆவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கே.எல்.ராகுல் அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுப்மன் கில் சேர்க்கப்பட்டிருந்தார்.

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில் களத்தில் இறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 27 ரன்கள் சேர்த்தனர். 12 ரன் எடுத்திருந்தபோது குன்மென் பவுலிங்கில் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா வெளியேறினார். சுப்மன் கில் 21 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த புஜாரா 1 ரன்னில் நாதன் லியோன் பந்துவீச்சில் போல்டானார். இதனால் 3 விக்கெட்டிற்கு 36 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. அடுத்து களமிறங்கிய ரவிந்திர ஜடேஜா 4 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமலும் நடையைக் கட்டினர். இதனால் 5 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் மட்டுமே அணி எடுத்திருந்தது. இந்த சரிவை மீட்க விராட் கோலி – விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் இணை போராடியது. இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 25 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

22 ரன் எடுத்திருந்தபோது, விராட் கோலி மர்ஃபி பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஸ்ரீகர் பரத் (17 ரன்) விக்கெட்டை நாதன் லியோன் கைப்பற்றினார். இதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழத் தொடங்கின. 33.2 ஓவரில் 109 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழநதது. கடைசி நேரத்தில் உமேஷ் யாதவ் 13 பந்தில் 2 சிக்சர் 1 பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குன்மன் 5 விக்கெட்டுகளையும், நாதன் லியோன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

First published:

Tags: Cricket