100 வயதான இந்தியாவின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி காலமானார்

இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி இன்று காலமானார்.

100 வயதான இந்தியாவின் மூத்த முதல்தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி காலமானார்
100-வது பிறந்த நாளை கொண்டாடும் வசந்த் ராய்ஜி
  • Share this:
இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி. இவருக்கு வயது 100. மும்பை கிரிக்கெட்டில் 1941-ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆரம்பித்தார்.

வலதுக்கை ஆட்டக்காரான இவர் 9 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 277 ரன்கள் எடுத்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 68.

வசந்தர் ராய்ஜிக்கு இந்த வருடம் ஜனவரி மாதம் 100 வயதானதை அடுத்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் இவரை நேரில் சந்தித்தனர்.


வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அவர் காலமானார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவரது இறுதி சடங்கு இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவிற்கு பிசிசிஐ, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading